கர்நாடகாவில் பீர் பாட்டிலின் விலையை மீண்டும் உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் தற்போது பீர் மீதான கலால் வரி 195 சதவீதமாக உள்ளது. இதனை 205 சதவீதமாக உயர்த்த கலால் துறை முடிவு செய்துள்ளது.
இதனால் பீர் பாட்டில் ஒன்றுக்கு 10 ரூபாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாகக் கடந்த பிப்ரவரியில் பீர் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விலை உயரவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.