மத்தியப்பிரதேசத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மணப்பெண்ணை, மணமகன் மருத்துவமனையில் வைத்தே திருமணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பராஜ் நகரைச் சேர்ந்த ஆதித்யா சிங் – நந்தினி சொலான்கி ஆகியோருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நந்தினி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருமணத்தைத் தள்ளிப்போட முடியாத நிலையில் குடும்பத்தார் மருத்துவமனையிலேயே திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
அதற்கு மருத்துவமனை நிர்வாகமும் ஒத்துழைக்க ஆதித்தியா சிங் -நந்தினி சொலான்கி ஜோடி திருமணம் குடும்பத்தார் முன்னிலையில் மருத்துவமனையில் வைத்து நடைபெற்றது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.