பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவிற்கு முழு ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா மீண்டும் உறுதியளித்துள்ளது.
பஹெல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டெண்ட் பிரண்ட்’ அமைப்பு பொறுப்பேற்றது.
இதனால் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டு, பாகிஸ்தானுக்கு எதிராகப் பல கடுமையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான தற்போதைய நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவுடன் அமெரிக்கா வலுவாக நிற்பதாகவும் அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் டாமி ப்ரூஸ் தெரிவித்துள்ளார்.