கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் 2 பைக்குகளை தோளில் சுமந்தபடி நடந்துச் சென்று போதைப்பொருள் ஒழிப்பு குறித்து இரும்பு மனிதன் கண்ணன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இரும்பு மனிதன் பட்டம் பெற்ற கண்ணன், உடல் வலிமையைப் பேணி காப்பதை வலியுறுத்தும் விதமாக பல்வேறு சாகசங்களைச் செய்து வருகிறார்.
அந்த வகையில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வித்தியாசமாக முயற்சியைக் கண்ணன் மேற்கொண்டார்.
நாகர்கோயில் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில், இரண்டு இருசக்கர வாகனங்களைத் தோளில் சுமந்தபடி சுமார் 43 மீட்டர் நடந்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதைக் கண்ட அங்குக் கூடியிருந்த மாணவ – மாணவியர், கைகளைத் தட்டியபடி கண்ணனை உற்சாகப்படுத்தினர்.