டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்து அங்கோலா அதிபர் ஜோ லொரென்சோ ஆலோசனை மேற்கொண்டார்.
அங்கோலா அதிபர் ஜான் மானுவல் 4 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். தொடர்ந்து டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் அங்கோலா அதிபர் ஜோ லொரென்சா ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்த ஜோ லொரென்சோ இருநாட்டு நல்லுறவு குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் இருநாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.