உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் போர் உடனடியாக முடிவுக்கு வராது என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர, இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பொதுப்புள்ளியை அடைய அமெரிக்கா தீவிரமாக முயற்சித்து வருகிறது எனத் தெரிவித்தார்.
இந்த போரைத் தொடர்ந்து நடத்தினால் ஆயிரக்கணக்கான வீரர்கள் தொடர்ந்து உயிரிழந்து கொண்டுதான் இருப்பார்கள் எனத் தெரிவித்தார்.