கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஏராளமான பொருட்கள் கருகிச் சேதமடைந்தன.
அமையாகரம் பகுதியில் சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து அங்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகிச் சேதமடைந்தன.