திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே விசாரணைக்காக வந்த போலீசார் வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஏறிக் குதித்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
குருமன்ஸ் காலனி பகுதியில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், இவரது சகோதரியான ராஜலட்சுமிக்கும் இடையே நிலத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ராஜலெட்சுமி புகாரளித்த நிலையில், போலீசார் முரளியின் வீட்டிற்குச் சென்றனர். அப்போது வீட்டின் கதவு பூட்டியிருந்ததால் போலீசார் சுவர் ஏறிக் குதித்துச் சென்றுள்ளனர். இது குறித்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.