பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவிற்கு 30-க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறினார்.
நாட்டின் பாதுகாப்பு கருதி தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்
தீவிரவாத தாக்குதலை எதிர்த்து பாஜக சார்பில் நாளை மாலை 4 மணிக்கு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் என்றும், சென்னையில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்தார்
பொட்டு வைப்பதும், கயிறு கட்டுவதும் மூட நம்பிக்கையா?… அப்படி என்றால் ஹிஜாப் அணிவதை ஏன் நிறுத்த சொல்லவில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சியில் மாணவர்களின் பைகளில் அறிவுக்கு பதிலாக அரிவாள் உள்ளது என்றும் தமிழிசை வினவினார்.