நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வை ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தாண்டிற்கான தேர்வை நாடு முழுவதும் 22 லட்சம் மாணவர்கள் எழுதி வருகின்றனர். தமிழகத்தில் 31 மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வை எழுதுகின்றனர். சென்னையில் 44 மையங்களிலும், திருச்சியில் 15 மையங்களிலும், நெல்லையில் 13 மையங்களிலும் நீட் தேர்வு நடைபெறுகிறது