திமுக ஆட்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது : நயினார் நாகேந்திரன்
Oct 5, 2025, 12:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக ஆட்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது : நயினார் நாகேந்திரன்

Web Desk by Web Desk
May 5, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இனி ஆட்சி அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாகவே இருக்கப் போகிறது என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மது போதையில் அட்டகாசம் செய்தவர்களைத் தட்டிக்கேட்ட 12-ம் வகுப்பு மாணவன் செல்வன். ஷியாம் சுந்தர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

போதையில் பொதுமக்களை அச்சுறுத்துபவர்களைக் கேள்வி கேட்பவர்கள் மீதே கொலைவெறித் தாக்குதல் நடத்துமளவிற்கு சமூக விரோதிகளுக்கு துணிச்சல் அதிகரித்து வருவது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.

“குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன்” என்று வாய்ச்சவடால் விடும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில்தான், தினந்தினம் போதைப் பழக்கத்தால் விளையும் வன்முறைக் குற்றங்களும் அதனால் சீரழியும் இளைஞர்களின் எண்ணிக்கையும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகின்றன.

அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் இதில் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்திற்கு செல்லும் என்ற தமிழக மக்களின் பொது நம்பிக்கைக்கு இம்மாதிரியான சம்பவங்கள் மறுக்க முடியாத ரத்த சாட்சிகளாக நிற்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் இதுபோன்று உச்சத்தைத் தொட்டுள்ள கொலை, கொள்ளை, போதைக் கலாச்சாரத்தைக் கண்டும் காணாமல் கடந்து, மக்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை உருமாற்றி வரும் இந்த பொறுப்பற்ற திமுக ஆட்சியானது அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது என்பதை தெளிவாக உணர முடிகிறது.

ஏனென்றால், 2026-ல் தமிழக மக்கள் கொடுக்கப் போகும் தீர்ப்பிற்கு பிறகு, இனி ஆட்சி அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாகவே இருக்கப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Tags: DMK rule is nearing its final phase: Nayinar NagendranDMKMK Stalintn bjptamil janam tvNayanar Nagendran mla
ShareTweetSendShare
Previous Post

சட்ட விரோதமாக பதுங்குபவர்கள் தங்கும் இடமாக தமிழகம் உள்ளது – அஸ்வத்தாமன்

Next Post

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக கண்டனம்!

Related News

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கன்னியாகுமரி : கன்னியம்பலம் கல் மண்டபத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies