தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வின் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பிளஸ்-2 மாணவ, மாணவியர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மாதம் 3-ந்தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வினை 7 ஆயிரத்து 518 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர்.
மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பணி கடந்த மாதம் 17ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் தேர்வு முடிவுகள் வரும் 8-ம் தேதி வெளியிடப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நாளை மறுநாள் வெளியாக உள்ள தேர்வின் முடிவுகளை tn.results.in மற்றும் dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் காணலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.