எலான் மஸ்க், ஸ்டார்பேஸ் என்ற தனது சொந்த நகரத்தை அமைப்பதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற பியூச்சர் டெக்னாலஜி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிறுவனராக இருக்கும் எலான் மஸ்க் அடுத்தடுத்து புதிய திட்டங்களைத் தீட்டி வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டார்பேஸ் என்கிற புதிய நகரத்தை உருவாக்க உள்ளதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்தவகையில், டெக்சாஸின் தெற்கு முனையில் உள்ள ஸ்டார்பேஸ் 4 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 97 சதவீத குடியிருப்பாளர்கள் இந்தப் பகுதியை புதிய நகராட்சியாக அங்கீகரித்தனர்.