காசாவை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்திற்கு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
காசாவின் 50 சதவீத பகுதிகளை இஸ்ரேல் ஏற்கனவே தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விட்டது. இந்நிலையில் இஸ்ரேலிய ராணுவம் காசாவில், அதன் நடவடிக்கையைத் தீவிரப்படுத்துவதற்கான திட்டத்தைப் பிரதமர் நெதன்யாகுவிடம் சமீபத்தில் தெரிவித்தது.
இதன்படி காசாவை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் ராணுவம் முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் அமைச்சரவை திங்கள்கிழமை இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.