ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே இரட்டை கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
மேக்கரையான் தோட்டத்துப் பகுதியில் வசித்துவந்த வயதான தம்பதியர் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து சம்பவம் குறித்து விசாரிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், குற்றவாளிகள் கைது செய்யப்படாததைக் கண்டித்து சிவகிரியில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொள்ள வருகைதந்த பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, கொலை செய்யப்பட்ட தம்பதியின் மகன் கவிசங்கர், மகள் பானுமதி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அண்ணாமலையைக் கண்டவுடன் கவிசங்கர் கதறி அழுதது காண்போரை கண் கலங்கச் செய்தது.