பிரேசில் நடைபெற்றுக் கொண்டிருந்த இசை நிகழ்ச்சியில் குண்டு வெடிக்கத் திட்டமிட்டிருந்த சதியை போலீசார் முறியடித்தனர்.
லேடி காகா என்பவர் மிகவும் பிரபலமான பாடகி. இவரின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று கொண்டிருந்தது.
இதில், லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சூழலில், அங்கு வெடிகுண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் துரிதமாக செயல்பட்ட போலீசார், சந்தேகப்படும்படி இருந்த இருவரை கைது செய்தனர். இதன் காரணமாக எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.