சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், சூடான் துறைமுகத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல் நடைபெற்றது. இதனால் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்து காட்சியளிக்கிறது.