ஐபிஎல் தொடரில் முதல் கேப்டனாக பேட் கம்மின்ஸ் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதன் மூலம், பவர் பிளேவிற்குள் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் கேப்டன் என்கிற சாதனையை கம்மின்ஸ் படைத்துள்ளார்.
குறிப்பாக கருண் நாயர், டு பிளெஸ்சிஸ், அபிஷேக் பொரேல் ஆகியோரின் விக்கெட்டுகளை கம்மின்ஸ் பவர் பிளேவிற்குள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.