பட்டுக்கோட்டை கொலை சம்பவம், புதுக்கோட்டைச் சாதிய மோதல் சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், சவக்குழிக்குச் சென்ற சட்டம் ஒழுங்கு தான் ஸ்டாலின் மாடல் ஆட்சிக்குச் சாட்சி எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிகழ்ந்த கொலை சம்பவங்களைச் சுட்டிக் காட்டியுள்ள அவர், ஸ்டாலின் மாடல் ஆட்சி எவ்வாறு உள்ளது என்பதற்கு இன்றைய ஒரு நாளின் செய்திகளே சாட்சி எனத் தெரிவித்துள்ளார்.
இனியும் திமுக அரசை நம்பி பயன் இல்லை எனவும் இன்னும் ஓராண்டு மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.