பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பாகிஸ்தானில் 5 பகுதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடக பிரிவு தலைவர் அகமது ஷெரிஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், பஹ்வல்பூர், கோட்லி, முசாபராபாத் ஆகிய நகரங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும் எனவும், பதிலடிக்கான நேரம் மற்றும் இடத்தை பாகிஸ்தான் முடிவு செய்யும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.