இந்தியா தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாத முகாம்கள் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு தக்க பதிலடி தரப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக பாதுகாப்பு துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ தலைமை தளபதி மற்றும் முப்படை தளபதிகளுன் அவர் ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. ‘ ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள. பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்பட்டை குண்டுமழை பொழிந்தது.
1,மர்கஸ் சுப்ஹான் அல்லா பஹவல்பூர்
2. மர்கஸ் தைபா, முரிட்கே
3. சர்ஜல் / தெஹ்ரா கலன்
4. மெஹ்மூனா ஜோயா வசதி, சியால்கோட்,
5. மர்கஸ் அஹ்லே ஹதீஸ் பர்னாலா, பிம்பர்,
6. மர்கஸ் அப்பாஸ், கோட்லி,
7. மஸ்கர் ரஹீல் ஷாஹித், கோட்லி மாவட்டத்தில் அமைந்துள்ளது,
8.முசாஃபராபாத்தில் உள்ள ஷவாய் நல்லா கேம்
9. மர்கஸ் சையத்னா பிலால் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவற்றில் முரித்கே என்பது லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைமையிடம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இடத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதி மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைமை இடமான பகவல்பூரலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.