எல்லை கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி அத்துமீறிய தாக்குதலில் 3 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் நேற்று நள்ளிரவு அதிரடி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு ஆப்பரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) மற்றும் சர்வதேச எல்லை (ஐபி) வழியாக பாகிஸ்தான் ராணுவம் பீரங்கித் தாக்குதலை நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் மூன்று அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.