பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதற்காக பிரதமர் மோடிக்கு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மீது இந்திய ராணுவ துல்லிய தாக்குதலை நடத்தியுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் திட்டத்தின் கீழ் தீவிரவாத அமைப்புகள் மீது பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலுக்காக பிரதமர் மோடிக்கு பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமது கணவரின் மரணத்திற்கு பழிவாங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சுபம் திவேதியின் மனைவி ஐஷான்யா கூறியுள்ளார். தீவிரவாத அமைப்புகள் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை வீண்போகவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவம் நடந்து 15 நாட்களுக்குப் பிறகு பயங்கரவாதிகளை அழித்து, பிரதமர் மோடி சொன்னதைச் செய்துள்ளார் எனவும் கூறியுள்ளனர்.