இந்தியாவை தொட்டால் பதிலடி நிச்சயம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நமது ராணுவத்தினரை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார். பஹல்காமில் அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி தரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்
இந்தியா மற்றும் மக்கள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் மோடி அரசு தக்க பதிலடி அளிக்கும் என்றும், பயங்கரவாதத்தை வேரறுக்கும் நடவடிக்கையில் பாரதம் உறுதியாக உள்ளதாகவும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுடன் அமித் ஷா தொலைபேசி மூலம் தொடர்பு கொணடு பேசினார். மேலும எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உறுதி செய்யுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.