ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை மேற்கொண்ட இந்திய ராணுவத்திற்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 22ம் தேதி பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து எல்லைப்பகுதிகளில் தொடர்ச்சியாக அத்துமீறிய தாக்குதல் நீடித்துவந்தது.
இந்நிலையில் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலை நடத்தியதில் பயங்கரவாதிகளும் அவர்கள் தங்கியிருந்த முகாம்களும் அழிக்கப்பட்டன.
இந்த சம்பவத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,
பயங்கரவாதத்தை ஒரு போது சகித்துக்கொள்ள முடியாது எனவும், உலக தீவிரவாதத்திற்குப் பூஜ்ஜிய சகிப்புத் தன்மையை காட்ட வேண்டும் எனவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் வாசகத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்திய ராணுவத்தினருக்குத் தனது வரவேற்பை தெரிவித்துள்ளார்.
சிந்தூர் தாக்குதல் நடத்திய இந்திய ராணுவப்படைக்கு மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா பாராட்டு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், இந்தியாவைக் கேலியாக விமர்சிப்பவர்களை விடமாட்டோம் எனவும், பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எரியும் திறமையும் உறுதியும் இந்தியாவிற்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆப்ரேஷன் சிந்தூரை சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா பயங்கரவாதத்தின் கோரப்பிடியை ஒழிப்போம் எனத் தெரிவித்தார்.