ருமேனியாவில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வந்தது.
இந்த சூழலில், மெஹெடிண்டியில் ஆலங்கட்டி மழை வெளுத்து வாங்கியது.
இதனால் வாகனங்கள், வீட்டின் கூரைகள் உள்ளிட்டவையும் சேதமடைந்தன.
மழை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கினர்.