மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் தொலைப்பேசியில் பேசினார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைப்பேசியில் தொடர்புகொண்ட கத்தார் அமைச்சர் முகமது பின் அப்துல்ரஹ்மான், பிரச்சனைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தினார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.