கோவை மாவட்டம், சூலூர் அருகே கனரா வங்கியில் அடகுவைத்த நகைகளுக்குப் பதிலாகப் பித்தளை நகைகளை திருப்பி கொடுத்ததாகப் பெண் அளித்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரங்கநாத புரத்தைச் சேர்ந்த விஜி ஜார்ஜ் அண்மையில் சூலூர் கனரா வங்கியில், குடும்பத் தேவைக்காகத் தனது 5 தங்க வளையல்களை அடமானம் வைத்துள்ளார்.
பெற்ற கடனை திருப்பி செலுத்திய அவரிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அதில் பித்தளை வளையல்கள் இருந்தது விஜி ஜார்ஜுக்கு தெரியவந்தது.
இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்காமல் அலட்சியமாகச் செயல்பட்டதைத் தொடர்ந்து, விஜி ஜார்ஜ் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.