சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே 700 காளைகள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது.
கட்டுக்குடிப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த மஞ்சு விரட்டு போட்டியில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த காளைகள் பங்கேற்றன.
சீறிப்பாய்ந்த காளைகளைக் காளையர்கள் விரட்டிப் பிடித்த நிலையில், காளைகள் முட்டி 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் மஞ்சுவிரட்டு போட்டியைத் திரளான மக்கள் கண்டு ரசித்தனர்.