தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும் நேரத்திற்குக் கோயில் தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பின், ஜூலை 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக 300 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், காலை 9 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள கோயில் தீட்சிதர்கள், நிழல் விழாத சுபமுகூர்த்த நேரமான நண்பகல் 12 மணிக்குக் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அறநிலையத்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.