பயங்கரவாதத்தை ஒழிக்கும் வீரதீர செயல் செய்த இந்திய ராணுவத்திற்கு வீர வணக்கம் செலுத்துவதாக, இந்து முன்னணி தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசுக்கு 100 சதவீத ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும்.
ராணுவத்தைப் பற்றியோ, தேசத்தைப் பற்றியோ யாரேனும் தவறான தகவல் பரப்பினால் தேசிய புலனாய்வு முகமையில் புகார் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தை ஒழிக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள அவர், இந்த முக்கியமான தருணத்தில் அனைவரும் தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.