பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட சேதம் தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அமைந்துள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட தாக்குதலில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்நிலையில், இந்தியாவின் ஏவுகணை தாக்குதலால் பயங்கரவாத முகாம்கள் சேதமடைந்த செயற்கைக்கோள் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
















