பிரதமர் மோடி தலைமயில் டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முப்படைகளும் சேர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் தலைமையகங்கள் மீது தாக்குதல் நடத்தின. “ஆப்ரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் 9 இலக்குகளை குறி வைத்து நடைபெற்ற தாக்குதலில் தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.