பாகிஸ்தான் மற்றும் நேபாள எல்லை மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. ஆப்ரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட இந்த தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த சூழலில், எல்லையோர மாநில முதலமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
இதில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 10 மாநில முதலமைச்சர்கள், டிஜிபிக்கள், தலைமைச் செயலாளர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து இந்த கூட்டத்தில் எல்லையோர மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.