இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து பாகிஸ்தானில் போர் சூழலுக்கான “ரெட் அலர்ட்” பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறித்து ” “ஆப்ரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாத இயக்கத் தலைவரின் குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவின் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் போர் சூழலுக்கான “ரெட் அலர்ட்” பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முக்கிய விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அரசு மருத்துவமனைகளை எப்போதும் தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் பதிலடியால் கதிகலங்கிய பாகிஸ்தான் ராணுவம், எல்லைப் பகுதிகளில் படைகளை அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.