கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக மின்கம்பங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவையில் கடந்த இரண்டு நாட்களாக சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில், காந்திபுரம் வி.கே.கே. மேனன் சாலையில் மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சாய்ந்தன.
உயர் மின் அழுத்த கம்பங்கள் திடீரென சரிந்து வீடுகள் மீது விழுந்ததால் அப்பகுதிகள் அச்சமடைந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் மரங்களை அகற்றி சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.