பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்த நிலையில், பிரபல செய்தி தொலைக்காட்சி நேரலையில் நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் பாகிஸ்தான் அமைச்சர் திக்குமுக்காடிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. இந்த ராணுவ நடவடிக்கைக்கு பிறகு, பிரபல ஊடகமான ஸ்கை நியூஸ் நெறியாளர் யால்டா ஹக்கீம், பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் என்பவரிடம் நேர்காணல் நடத்தினார்.
அப்போது, பேசிய பாகிஸ்தான் அமைச்சர், தங்கள் நாட்டில் எந்த பயங்கரவாத முகாம்களும் இல்லை என்றும், பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு எனவும் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நெறியாளர், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதத்தை ஆதரித்ததாக அவர் ஒப்புக் கொண்டதை சுட்டிக்காட்டினார். இதற்கு பதில் சொல்லாமல் முடியாமல் பாகிஸ்தான் அமைச்சர் திணறினார்.