ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், இருநாடுகள் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்திய எல்லைப் பகுதிகளில் உள்ள மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு இன்று முதல் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கௌரவ் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அமலில் இருக்கும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.