பாகிஸ்தான் வான் பாதுகாப்பு ரேடர் அமைப்புகளை குறி வைத்து இன்று காலை தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி பகுதிகளில் மோர்டார்கள் மற்றும் கனரக பீரங்கிகளைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே பாகிஸ்தான் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை, இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார்களையும் அமைப்புகளையும் குறிவைத்ததாகவும், இந்தியாவின் பதிலடி பாகிஸ்தானைப் போல் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் இதேபோல் பாகிதஸ்தாளில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புக்கு பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் நம்பத்தகுந்த முறையில் அறியப்படுவதாகவும் பாதுகாப்பு துறை அமைச்சகம் கூறியுள்ளது.
ராடார் கட்டமைப்பை குறி வைத்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை முறியடிக்க பாக். ராணுவம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.