இந்தியாவின் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ எதிரொலியாக பாகிஸ்தானில் பங்குச்சந்தை மூடப்பட்டது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து, ‘அப்ரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதல் பாகிஸ்தானின் பங்குச்சந்தையில் எதிரொலித்த நிலையில், பாகிஸ்தானின் வங்கிகள், தொழில்துறை நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டன. முதலீட்டாளர்கள் அனைவரும் தங்களின் பங்குகளை திரும்பப் பெற்றதால், பாகிஸ்தான் பங்குச்சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சரிவை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் பங்குச்சந்தை மூடப்பட்டது.