இந்திய ராணுவத்தின் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தளபதி அப்துல் ரவூஃப் அசார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் அசாரின் சகோதரரும், அந்த அமைப்பின் தளபதியுமான அப்துல் ரவூஃப் அசார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
1999-ம் ஆண்டு நடைபெற்ற ஐசி-814 விமான கடத்தலில் மூளையாக செயல்பட்ட அப்துல் அசார், பின்னர் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்காவால் உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.
இந்தியாவின் தாக்குதலின்போது அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம் ஒன்றில் அப்துல் அசார் இருந்தது உறுதி செய்யப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.