பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி-ஐ இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பேசிய ஜெய்சங்கர், பதற்றமான சூழலை அதிகரிப்பது இந்தியாவின் நோக்கமல்ல எனவும், பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
அத்துடன் இந்தியாவுடன் நெருங்கிய உறவில் இருக்கும் பாகிஸ்தானின் அண்டை நாடான ஈரானுக்கு, இந்த போர் பதற்றம் குறித்த தெளிவான புரிதல் இருக்க வேண்டியது அவசியம் என்றும் ஜெய்சங்கர் கூறினார்.