பாகிஸ்தான் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் தினேஷ் குமார் வீர மரணம் அடைந்தார்.
இந்நிலையில், தினேஷ் குமாரின் உடல் ஹரியானாவில் உள்ள அவரது சொந்த கிராமமான பல்வாலுக்கு கொண்டு வரப்பட்டது. ராணுவ வாகனத்தில் ஏற்றி கொண்டுவரப்பட்ட தினேஷ் குமாரின் உடலுக்கு, சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்கள் திரண்டு நின்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து லான்ஸ் நாயக் தினேஷ் குமாரின் உடல் தேசிய கொடி போர்த்தப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், உடலை கட்டியணைத்து குடும்பத்தார் கதறி அழுத காட்சி அங்கிருந்தோரை சோகத்தில் ஆழ்த்தியது.