இந்தியாவின் தாக்குதலுக்கு அஞ்சி பாகிஸ்தான் பிரதமர் தனது குடும்பத்துடன் பதுங்கு குழியில் பதுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத் நகரில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வீடு அருகே இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதனால், அச்சம் அடைந்த ஷெபாஸ் ஷெரீப், தனது குடும்பத்துடன் பதுங்கு குழியில் பதுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
இதனிடையே பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை, ராணுவத்தின் மற்றொரு பிரிவு கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அத்துடன் அவரை பதவி நீக்கம் செய்ததாகவும் தெரிகிறது. ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், லெப்டினன்ட் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா புதிய பாகிஸ்தான் ராணுவத் தலைவராகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.