போர் பதற்றம் காரணமாக பஞ்சாப் டெல்லி இடையிலான ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
ஐபிஎல் தொடரின் 58வது லீக் ஆட்டம் இமாச்சல்பிரதேசம் மாநிலம் தர்மசாலா மைதானத்தில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 10 ஓவர்கள் விளையாடிய நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதால் போட்டி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து கிரிக்கெட் வீரர்கள் மற்ரும் ரசிகர்கள் மைானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அத்துடன் வீரர்கள் மற்றும் ஊழியர்களை பாதுகாப்பாக அழைத்து வர சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுல்ளது.