பாகிஸ்தான் மீதான தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமாக எடுத்துரைத்தார்..
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இருநாட்டு ராணுவமும் இரவு முழுவதும் தாக்குதல் நடத்தி வந்தன. இதுதொடர்பாக முப்படைத் தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், இந்தியாவின் தாக்குதலை தொடர்ந்து கண்காணித்து வந்த பிரதமர் மோடியிடம் தாக்குதல் குறித்து தொலைபேசி வாயிலாக ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். அதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.