இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்வை நோக்கி நகர வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
போர் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் டாமி புரூஸ், ஜம்மு-காஷ்மீரில் நடந்த தாக்குதல் மிகவும் மோசமானது எனவும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.
போர் பதற்றத்தைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த அவர், தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு வர வேண்டும் என இருநாடுகளுக்கும் அழைப்பு விடுத்தார்.