பாகிஸ்தானின் பயங்கரவாத தொடர்பை உலகிற்கு இந்தியா அம்பலப்படுத்தியுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மட்டுமே இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், பஹல்காம் தாக்குதலே இந்த பிரச்சனைகளுக்கு துவக்கப்புள்ளி என்றும் தெரிவித்தார்.
அதேபோல, இந்தியாவால் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டிய விக்ரம் மிஸ்ரி, அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டார்.
இதன் மூலம், பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கவில்லை என்ற பாகிஸ்தானின் பொய் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும், பாகிஸ்தானின் பயங்கரவாத தொடர்பை உலகிற்கு இந்தியா அம்பலப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.