இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்க தலையிடாது என அந்நாட்டு துணை வான்ஸ தெரிவித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் போர் பிராந்திய போராகவோ அல்லது அணு ஆயுத போராகவோ மாறக்கூடாது என தெரிவித்தார். அவ்வாறு நடந்தால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்கா இந்தியர்களை ஆயுதங்களைக் கீழே போடச் சொல்ல முடியாது என்றும், பாகிஸ்தானியர்களையும் ஆயுதங்களைக் கீழே போடச் சொல்ல முடியாது என்றும் அவர் கூறினார். எனவே, இராஜதந்திர வழிகள் மூலம் இந்த விஷயத்தைத் தொடரப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.