இந்தியா பாகிஸ்தான் பதற்றத்தை தணிக்க சர்வதேச சமூகத்தின் மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
இதுதொர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய நிலை கவலை அளிக்கிறது. சீனா அனைத்து வகையான பயங்கரவாதத்தை எதிர்க்கிறது.
அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் பரந்த நலனுக்காக செயல்படவும், ஐ.நா. சாசனம் உட்பட சர்வதேச சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டுகிறோம்.
அமைதியாக இருக்கவும், நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்கவும் இரு தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்.
தற்றத்தை தணிக்க சர்வதேச சமூகத்தின் மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.